தல்கீன் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு
தொடர் – 01 (புதிய தொடர் ஆரம்பம்)
அதிசங்கைக்குரிய ஷெய்குனா கலாநிதி மௌலவீ
அல்ஹாஜ் A. அப்துர்றஊப்(மிஸ்பாஹீ) அவர்கள்
“குன்” என்ற சொல் கொண்டு குவலயம் படைத்த கோனே! ஏகனே! எல்லாம் அறிந்தவனே! நிகரில்லாதவனே! அடியான் தன்னை ஒரு சாண் நெருங்கினால் தான் அவனை ஒரு முழம் நெருங்குவதாயும் அவன் ஒரு முழம் நெருங்கினால் தான் அவன் பக்கம் ஒரு பாகம் நெருங்குவதாயும்,
அவன் தன் பக்கம் நடந்து வந்தால் தான் அவன் பக்கம் ஓடி வருவதாயும் “ஹதீதுக்குத்ஸீ” மூலம் வாக்களித்த வல்ல நாயனே! தனதடியான் தன்னை நினைக்குமிடத்தில் தானிருப்பதாகச் சொன்ன றஹ்மானே! நீங்கள் என்னை நினையுங்கள்.
நான் உங்களை நினைப்பேன் என்று திருக்குர்ஆனில் வாக்களித்த வல்ல நாயனே!நான் உன்னை புகழ்கின்றேன். என் நாவினால் மட்டுமன்றி எனது உடல்முழுவதாலும் உன்னைப்புகழ்கின்றேன். உனக்கு நன்றியும் சொல்கின்றேன். உன்னுடைய அருட்பார்வை கொண்டு என்னை ஒரு நொடி நேரம் பார்த்துவிடு.
அதுவே எனக்குப் போதும். அது கொண்டு என் பாவங்கள் எரிந்து சாம்பராகி விடும். அல்ஹம்துலில்லாஹ்.

யாறஸூலல்லாஹ்! யாஹபீபல்லாஹ்! யாறஹ்மதன்லில் ஆலமீன்! யாஷபீஅல் முத்னிபீன்! யாஇமாமல் அன்பியாயிவல்முர்ஸலீன்! யாஇமாமல் முத்தகீன வல்முவஹ்ஹிதீன்! யாஸெய்யிதல் ஆலம்! யாஅதா அல்ஹக்!
உங்கள் போல் ஒரு சிருட்டி நான் வாழ்வில் அறிந்ததில்லை. உங்கள் போல் ஒரு நபீயும் இப்புவியில் தோன்றவில்லை.
“யாஷபீஅல் முத்னிபீன்”பாவிகளுக்காய்ப் பரிந்துரைக்கும் பயகம்பரே! மறுமையில் எனக்காகப் பரிந்துரைப்பீர்களா? கைதந்து காப்பீர்களா? ஒவ்வொரு நபீயும் யாநப்ஸீ – யாநப்ஸீ என்னைக்கார் என்னைக்கார் என்று சொல்லும் வேளையில் யாஉம்மதீ – யாஉம்மதீ எனது சமூகம் கார் – எனது சமூகம் கார் என்று குரல் கொடுக்கும் கண்ணியநபீயே!
பாவம் தோய்ந்த நாவால் உங்கள் மீது ஸலவாத் –ஸலாம் சொல்ல நான் தகுதியற்றவன். என் நா நாணுகின்றது. ஆகையால் அந்தப்பொறுப்பை அல்லாஹ்விடம் ஒப்படைக்கின்றேன். அல்லாஹூம்ம ஸல்லிவஸல்லிம் அலாஹபீபிக்க ஸெய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலிஹீ வஅஸ்ஹாபிஹீ அஜ்மயீன்.
உள்ளே நுழையுமுன்
காத்தான்குடி ஊர்வீதியில் வசிக்கும் சகோதரர் எம்.எல்.எம் இஸ்மாயீல் அவர்கள் 14.01.2005 அன்று என்னிடம் வந்து, ‘எனது சகோதரி மரணித்த போது ஊர் வீதியிலுள்ள சின்னப் பள்ளிவாயலில் “ஜனாசஹ்” தொழுகை நடாத்தி ஜாமிஉள்ளாபிரீன் மையவாடியில் நல்லடக்கம் செய்தோம். அடக்கப்பணிகளை மேற்கொண்ட மௌலவி அவர்கள் வழமையாக “ஜனாசஹ்” வுக்கு ஓதப்படுகின்ற “தல்கீன்” ஓதவில்லை.
இது எனக்கும், எனது உறவினருக்கும் பெருங் கவலையையும், வேதனையையும் தந்தது. அதோடு எனது அயலவர்களும் இது பற்றிக் குறைபட்டுக் கொண்டனர். பின்பு ஜாமியுள்ளாபிரீன் பள்ளிவாயலின் தலைவர் அவர்களை நான் கண்டு இது பற்றிக் கூறியபோது இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு தனக்கு ஒரு கடிதம் தருமாறு கேட்டுக்கொண்டார். நான் ஒரு கடிதம் கொடுத்தேன்.
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அதிபர் அவர்களைச் சந்தித்து அவர்களிடமும் இவ்விவரத்தைக் கூறினேன். அவர்களும் நடவடிக்கை எடுப்பதற்காகத் தனக்கு ஒரு கடிதம் தருமாறு கேட்டார்கள். அவர்களுக்கும் ஒரு கடிதம் கொடுத்தேன். பின்னர் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அவர்களைக் கண்டு அவர்களிடமும் இது பற்றி முறையிட்டேன். அவர்களும் தனக்கு ஒரு கடிதம் தருமாறு கேட்டார்கள். அவர்களுக்கும் ஒரு கடிதம் கொடுத்துள்ளேன்.
இறுதியாக உங்களுக்கும் ஒரு கடிதம் எழுதிக் கொண்டு வந்துள்ளேன்.’ என்று கூறிக் கடித்தைத் தந்தார்.உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் என்னைக் கேட்டுக் கொண்டார். காத்தான்குடி உலமா சபையும்,ஜாமிஅதுல் பலாஹ் ஹஸ்றத்மார்களும் இதற்குத் தகுந்த பதில் கொடுப்பார்கள் என்று 14.01.2006 வரை சரியாக ஒரு வருட காலம் பொறுத்திருந்து பார்த்தேன்.
ஒரு பதிலும் வெளிவரவில்லை. வேலை காரணமாக அவர்கள் பதில் கொடுக்காமல் விட்டுருக்கலாம், அல்லது மறந்திருக்கலாமென்று அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டவனாக“தல்கீன்” ஓதுதல் தொடர்பாக சட்டக் கலை நூல்களிருந்து ஆதாரங்கள் திரட்டி ஒரு தொகுப்பு எழுதி வெளியிட்டால் கேள்விகேட்ட சகோதரரும், ஏனையோரும் பயன்பெறுவார்கள் எனக் கருதி இத் தொகுப்பை எழுதி வெளியிடுகிறேன்.

என்னுடைய அறுபத்துமூன்று வருட வாழ்க்கையில் நான் பிறந்து வாழ்த்து கொண்டிருக்கிகின்ற காத்தான்குடியில் மூன்று “ஜனாசஹ்” கள் மட்டும் “தல்கீன்” ஓதாமல் அடக்கம் செய்யப்பட்டது எனக்கு தெரியும். இவ்வாறு செய்தவர்கள் கூட அண்மைக் காலத்தில் மௌலவி பட்டம் பெற்ற சிலரும், சஊதி நாட்டில் படித்தவர்களுமேயாவர்.
காத்தான்குடியில் இமாம்கள் போல் திறமையும், அறிவு முதிர்ச்சியும், அனுபவமும் உள்ள பலர் இருந்துங்கூட அவர்களில் ஒருவர் கூட தல்கீனுக்கு எதிராகக் குரல் கொடுத்ததில்லை. மாறாக அனைவரும் “தல்கீன்” ஓதியே ஆயிரக்கணக்கான “ஜனாசஹ்” கள் அடக்கம் செய்து வந்துள்ளார்கள். “தல்கீன்” ஓதாமல் கால்நடைகளைக் குழியிலிட்டுப் புதைப்பதுபோல் “ஜனாசஹ்” களைப் புதைக்கும் நோய் அல்லது பைத்தியம் சமீபத்தில் பரவியதேயாகும்.
அல்லாஹ்வின் பேரருளாலும், அவ்லியாஉகளின் பறக்கத்தாலும் மட்டுமே இந்நோய் சுகமடைய வாய்ப்புண்டே தவிர இதற்கு மருந்து மாத்திரை எதுவுமே இல்லை.பிறவியில் முடம் பேய்க்குப் பார்த்துத் தீராது. இத்தொகுப்பில் நான் எழுதும் சட்டங்கள் யாவும் ஷாபிஈ மத்ஹபைத் தழுவியதாகவே இருக்கும். இந்த மத்ஹபில் மிகப் பிரசித்தி பெற்ற இமாம்களால் எழுதப்பட்ட ஹவாஷிஷ்ஷர்வானீ, அகாயிது ஸுன்னஹ், முக்னில் முஹ்தாஜ், துஹ்பதுல் முஹ்தாஜ், றவ்ழதுத்தாலிபீன், அர்றவ்ழுல்முறப்பவு, உம்ததுஸ்ஸாலிக், பத்ஹுல்முயீன்-இஆனதுத்தாலிபீன், ஜவ்ஜரீ, ஷர்ஹுல்மஹல்லி, அல்பாஜுரீஅலாஷரஹிப்னிகாஸிம் போன்ற சட்டநூல்களிருந்து ஆதாரங்கள் எடுத்துள்ளேன்.

இத் தொகுப்பை வாசிக்கும் மார்க்க அறிஞர்கள், அறபுக்கல்லூரி அதிபர்கள், உஸ்தாதுமார்கள் முப்திகள் பிழை இருக்கக் கண்டால் என்னை நேரில் கண்டு அல்லது கடிதம் மூலம் எனக்கு அறிவித்தால் பிழையைத் திருத்திக் கொள்ள நான் ஆயத்தமாயுள்ளேன். ஆயினும் “லாமத்ஹப்”காரர்களின் கருத்துக்களை எற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை. இவர்களுடன் பேசி அல்லது விவாதித்து எனது நேரத்தை வீணாக்கவும் நான் விரும்பவில்லை.
ஷரீஅத்தின் பார்வையில் தல்கீன்
“தல்கீன்” என்ற இச்சொல்லுக்கு சொல்லிக் கொடுத்தல் என்ற பொருள் வரும். “மையித்” பிரேதத்தை நல்லடக்கம் செய்தபின் ஒருவன் அதன் தலைப் பக்கம் அமர்ந்து பின்வரும் விடயங்களை அதற்குச் சொல்லிக் கொடுப்பதற்கு “தல்கீன்” ஓதுதல் என்று சொல்லப்படும். அந்த விடயங்கள் அடங்கிய அறபுமொழியிலுள்ள ஓதலும், அதன் மொழி பெயர்ப்பும் பின்னால் வரும் “தல்கீன்” ஓதும் வழக்கம் இலங்கை நாட்டைப் பொறுத்தவரை பெரும் பட்டணங்கள் முதல் சிறிய குக் கிராமங்கள் வரை இருந்து வந்துள்ளது.
இவ் வழக்கத்தை அவ்வக்காலத்தில் வாழ்ந்த மார்க்க அறிஞர்களே செய்து வந்துள்ளார்கள். அவர்களில் எந்த ஓர் அறிஞன் கூட எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவ் வழக்கம் இஸ்லாமுக்கு முரணானதென்று சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை, இவ் வழக்கத்தைக் கைவிட்டதுமில்லை. சுருங்கச் சொன்னால் இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகக் கருதப்படவே இல்லை. எனினும் அண்மைக் காலம் தொட்டு இவ்வழக்கம் குறைந்து வருவதைக் காணமுடிகின்றது.
தெளிவாகச் சொன்னால் வஹ்ஹாபிய வழியிற் செல்வோர்களே இதற்குக் காரணர்களாக உள்ளனர். “தல்கீன்” ஓதுவதற்கு ஆதாரம் இல்லை என்றும், ஆதாரமில்லாதது “பித்அத்”என்றும் “பித்அத்”எல்லாம் வழிகேடு என்றும் கூறி இவ்வழக்கத்தைத் தடுத்து வருகின்றார்கள். ஆயினும் வஹ்ஹாபியக் கொள்கையை எதிர்த்துக் கொண்டிருக்கும் “ஸுன்னத்வல்ஜமாஅத்” கொள்கை வழி செல்லும் நல்லடியார்களான மார்க்க அறிஞர்கள்இதற்கு ஆதாரமுண்டு என்று கூறுகின்றார்கள்.

இரு பிரிவினர்களும் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையிலிருந்து கொண்டு எதிரும் புதிருமான கருத்துக்கள் கூறுவதால் “அவாமுன்னாஸ்” மாரக்க ஞானமில்லாத பொதுமக்கள் அறிஞர்களில் யாரை ஏற்பது? யாரை எறிவது? என்று செய்வதறியாமல் நிலைகுலைந்து நிற்கின்றார்கள். “தல்கீன்” ஓதலாம் என்று கூறுபவர்களின் பின்னால் ஒரு கூட்டமும், அது கூடாதென்று கொக்கரிப்பவர்கள் பின்னால் இன்னொரு கூட்டமும் நின்று கொண்டு வாதப்பிரதிவாதங்களிலும், சண்டைசச்சரவுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே “தல்கீன்” ஓதக்கூடாதென்று கூறுவோர் தமது வாதத்திற்கு முன்வைக்கும் ஆதாரங்களையும் அவற்றுக்கான மறுப்பையும், அது கூடுமென்று கூறுவோர் தமது வாதத்திற்கு முன்வைக்கும் ஆதாரங்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் இங்கு எழுதுகின்றோம். முதலில் “தல்கீன்” ஓதுவதை மறுப்போரின் ஆதாரங்களையும், அவற்றுக்கான மறுப்பையும் எழுதுகின்றோம். “தல்கீன்”ஓதுவதற்கு திருக்குர்ஆனிலோ, “ஸஹீஹ்” பலம் லாய்ந்த நபீமொழியிலோ
ஓர் ஆதாரம் கூட இல்லாதிருப்பதால் அது “பித்அத்”என்ற வழிகேடென்றும் அது தவிர்கப்படவேன்டும் என்றும் “தல்கீன்”ஓதுவதை மறுப்போர் கூறுகின்றார்கள்.
இவர்களின் இக்கூற்றை கருவாகக் கொண்டு இரண்டு விடயங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
ஒன்று– ஒருவிடயத்திற்கு “ஸஹீஹ்” பலமான நபீ மொழியில் ஆதாரமில்லாமல் “ழஈப்” பலம் குறைந்த நபீ மொழியில் மட்டும் ஆதாரமிருந்தால் அது கொண்டு செயல்படலாமா? ஆகுமா? ஆகாதா?
இரண்டு – “பித்அத்”எல்லாம் வழிகேடாகுமா? இல்லையா?
நபீ மொழிகளின் வகைகள்
“முஹத்திதீன்”நபீமொழி ஆய்வாளர்கள் நபீ மொழிகளைபலதரங்களாக வகுத்து கூறியுள்ளார்கள். அவற்றில் ஸஹீஹ், ழஈப், மவ்ழூஉ என்பன அடங்கும் இம் மூன்றிலும் “ஸஹீஹ்”என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இது பற்றி இங்கு விளக்கம் கூறத்தேவையில்லை.“மவ்ழூஉ”என்பது முழுமையாக மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சுருங்கச் சொன்னால்“மவ்ழூஉ” என்பது நபீ ஸல் அவர்கள் சொல்லாததை அவர்கள் சொன்னதாகச் சொல்லப்பட்ட ஒன்றாகும். இது பற்றியும் இங்கு விளக்கம் கூறத் தேவையில்லை. ஆயினும் சிந்தனைக்குச் சில உதாரணங்கள்.
من بلغ ار بعين سنة ولم يأخذ العصا فقد عصي أبا القاسم صلي الله عليه وسلم
ஒருவன் நாற்பது வயதை அடைந்து ஒரு தடி –கைக்கோல் எடுத்துக் கொள்ளவில்லையாயின் அவன் நபீ ஸல் அவர்களுக்கு மாறுசெய்துவிட்டான். என்பது போன்று. இது கைக்கோல் வியாபாரி ஒருவனால் தன்னலங் கருதிச் சொல்லப்பட்ட, நபீ ஸல் அவர்கள் மீது இட்டுக் கட்டப்பட்டதாகும்.
من لم يأ كل متّي فليس من أمّتي
“மத்தீ”என்ற கருவாடு சாப்பிடாதவன் எனது உம்மத்திலுள்ளவனல்லன் என்பது போன்று. இது மத்தீ கருவாடு வியாபாரி ஒருவனால் தன்னலங் கருதிச் சொல்லப்பட்டதாகும்.
இந்த “மவ்ழூஉ” என்பது முற்றாக மறுக்கப்பட வேண்டியதென்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இல்லை.
“ழஈப்”என்றால் பலம் குறைந்ததாகும். இது நபீ மொழிகளை அறிவிக்கும் “றாவீ”அறிவிப்பாளர்களுடன் தொடர்புள்ள விடயமாகும். ஒரு நபீ மொழியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவரேனும் சந்தேகத்துக்குரியவராயின் அந்த நபீ மொழி “ழஈப்”பலம் குறைந்ததென்று சொல்லப்படும்.
உதாரணமாக ஒரு நபீ மொழியை ஐந்து அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் நால்வர் நம்பிக்கைக்குரியவர்களாயும்,ஒருவர்மட்டும் சந்தேகத்துக்குரியவராயுமிருந்தாலும் கூட அது “ழஈப்” பலம் குறைந்ததென்றே கணிக்கப்படும். “ழஈப்”பலம் குறைந்த நபீ மொழி என்பதற்கான சுருக்கமான விளக்கம் இதுவே.

“ழஈப்” எனக் கருதப்படும் ஒரு நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு மார்க்க “பத்வா”– தீர்ப்பு மட்டும் தான் வழங்க முடியாதேயன்றி அதை ஆதாரமாகக் கொண்டு ஒருவன் செயல்படுவதால் எந்தக் குற்றமும் வந்துவிடாது. “ழஈப்”பலம் குறைந்த நபீ மொழி கொண்டு “பழாயிலுல் அஃமால்” மேலதிக வணக்க வழிபாடுகளில் செயல்படலாம் என்பது இமாம்களின் ஏகோபித்த, தீர்க்கமான முடிவாகும்.
“ழஈப்”ஆன நபீ மொழி கொண்டு செயல்படுவதால் – அமல் செய்வதால் எந்தக் குற்றமும் வராதென்றிருக்க, அந்த நபீ மொழி கொண்டு செயல்படுதல் பெருங்குற்றமென்று பொது சனங்களுக்கு காட்டும் பாணியில் கண்டதெற்கெல்லாம் இது ழஈப், அது ழஈப் என்று அடம்பிடித்து நிற்பதும், இவ்வழக்கத்தை தொழிலாகக் கொள்வதும் பிழையானதாகும்.

இமாம்களில் அநேகர் தமது நூல்களில் “ழஈப்”ஆன நபீ மொழிகளை நிறைய எழுதியிருப்பதை நாம் காண்கின்றோம். இமாம் கஸ்ஸாலீ (றஹ்) அவர்கள் தங்களின் “இஹ்யாஉ உலீமித்தீன்”என்ற சூபிஸ ஞான ஏட்டில் அநேக “ழஈப்”ஆன நபீ மொழிகளைப் பதிவு செய்துள்ளார்கள்.
அதே போல் இமாம் இஸ்மாயீல் ஹக்கீ (றஹ்) அவர்கள் தங்களின் “தப்ஸீர் றூஹில்பயான்” என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூலில் அநேக பலம் குறைந்த நபீ மொழிகளைக் கொண்டு வந்துள்ளார்கள். இந் நூல்கள் “ழஈப்” ஆன நபீ மொழிகள் பதிவு செய்யப்பட்டவை என்ற காரணத்தால் இவற்றைத் தூக்கியெறிதல் கூடாது. அது அறிவுடமையுமல்ல.
அவை பலம் குறைந்த நபீமொழிகள் என்பதை அவர்கள் அறிந்திருந்துங்கூட அவற்றைப் பதிவு செய்தது அவை கொண்டு செயல்படலாம் என்ற அடிப்படையைக் கருதிற் கொண்டும், மக்கள் நல்லமல்கள் செய்து நற்பாக்கியம் பெறட்டும் என்ற நல்லெண்ணத்தைக் கருத்திற் கொண்டுமேயாகும்.

இவ்வாறு “ழஈப்”எனக் கருதப்படும் நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு “பத்வா”மார்க்கத் தீர்ப்பு மட்டும் தான் வழங்க முடியாதே தவிர அதை ஆதாரமாகக் கொண்டு ஒருவர் செயல்படுவதால் எந்தக் குற்றமும் வந்துவிடாது. இது ஹதீதுக்கலை மேதைகளினதும், சட்டக்கலை மேதைகளினதும் ஏகோபித்த முடிவாகும்.
இந்த முடிவின்படி “தல்கீன்”ஓதுதல் தெடர்பாக வந்துள்ள நபீ மொழிகள் பலம் குறைந்தவை என்று வைத்துக் கொண்டாலும் கூட அவற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதால் எந்தக் குற்றமும் வந்துவிடாது.

“தல்கீன்” தொடர்பாக வந்துள்ள பலம் குறைந்த நபீ மொழிகள் பற்றிக் கூறிய இமாம்கள் அவை பலம் குறைந்தவையாயினும் வேறு ஆதாரங்கள் கொண்டும், ஷாம் – சிரிய நாட்டு மக்கள் தொன்றுதொட்டு அந்த நபீ மொழிகளின் படி செயல்பட்டு வந்தது கொண்டும் அவை பலம் வாய்ந்த நபீ மொழிகள் போல் கணிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்கள்.
இவர்களின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு தல்கீன் தொடர்பாக வந்துள்ள நபீ மொழிகளின்படி செயல்படுவது சிறந்ததாகும். “ழஈப்”– பலம் குறைந்த “ஹதீது” என்றால் அது எந்த வகையில் பலம் குறைந்ததென்பது மார்க்க அறிஞர்களுக்கு மட்டுமே தெரியும். ஆகையால் பொதுமக்கள் பலம் குறைந்த “ஹதீது” என்றால் நபீ ஸல் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டதென்று தவறாக விளங்கி அதை முற்றாகப் புறக்கணித்து வருகின்றார்கள்.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுக்கு அறபு மொழியில் “மவ்ழூஉ”எனப்படும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வுண்மையை மார்க்க அறிஞர்கள் அவர்களுக்கு விளக்கி வைக்கவும் வேண்டும்.

மேற்கண்ட விபரங்கள் மூலம் “ழஈப்”– பலம் குறைந்த நபீ மொழி கொண்டு ஒருவன் அமல் செய்யலாம் –செயல்படலாம் என்பது தெளிவாகிவிட்டது.
நன்றி ஷம்ஸ் தளம்.
தொடரும் .