தத்துவத்தையுடையவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போய் விடுவதில்லை! உடல்களும் நசிப்பதில்லை, ஜீவியத்தில் இருந்தது போலவே கபுரிலும் சடலம் கோர்வை குலையாமலிருக்கும்.

அன்பியாக்களுடைய உடல்களைத் தின்பதை இறைவன் நிச்சயமாக பூமிக்கு ஹறாமாக்கிவிட்டான் என்று நபிகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹதீது. அபூதாவூது - இபுனு மாஜா - பைஹகீ முதலிய ஸஹீஹான கிரந்தங்களில் காணப்படுகின்றது. ஆகவே, அவர்கள் ஜீவியத்தில் எப்படியிருந்தார்களோ அப்படியே, பூலோகத்தை விட்டு மறைந்த பின்பும் கபுரில் இம்மைக்கும் மறுமைக்கும் மத்தியிலுள்ள ஆலம் மிதாலாகிய பர்ஜகில் உலகமுடிவு நாள் வரை ஹயாத்தாகவே இருப்பார்கள்.

அல்லாஹ்வுடைய பாதையில் (பீஸபீலில்) வெட்டப்பட்டவர்களை மவுத்தானவர்களென்று சொல்லாதீர்கள். அவர்கள் ஹயாத்தையுடையவர்கள். ஆனால், அறியமாட்டீர்கள் (2:154) என்றும், ஆண்டவனுடைய பாதையில் வெட்டப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நினைக்கவும் வேண்டாம். ஆனால் அவர்கள் ஜீவனுள்ளவர்கள். ஆண்டவன் பக்கமிருந்து ரிஸ்கை கொடுக்கப் படுகிறார்கள்ளூ ஆனந்தமாக இருக்கிறார்கள் (3:169,170) என்றும் அல்லாஹுதஆலா குர்ஆன் ஷரீபில் திருவுளம் பற்றியுள்ளான்.
மேலே கண்ட ஆயத்திற்கு விளக்கமாக, முஷ்ரிக்குடன் யுத்தஞ்செய்து வெட்டப்பட்டு ஷஹீதானாலும் சரிளூ தம்முடைய நப்ஸுடன் ஆத்மார்த்திகப் போர் செய்து அதை வெட்டி வீழ்த்தினாலும் சரி, இரண்டுமே பீஸபீல்தான் என்று மெய்ஞ்ஞான சொரூபர், ஷைகுல் அக்பர், முஹ்யித்தீன் இபுனு அறபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களது தப்ஸீரீல் 1-வது பாகம், 137-வது பக்கத்தில் கூறியுள்ளார்கள். தொடர்ந்து வாசிக்க......

هل تطير المساجد في عرصات القيامة؟


மறுமை வெளியில் பள்ளிவாயல்கள் பறந்துசெல்லுமா?




  உலகில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கும், தங்களின் இறைவனுக்கும் இடையேயான தொடர்பினை நெருக்கமாக்கிக் கொள்வதற்கான புனித இடங்களாக பள்ளிவாயல்களை அமைத்துக் கொள்கின்றனர். 
அதில் அவர்கள் தங்களின் இறைவன் கடமையாக்கிய பர்ளான, (கடமையாக்கப்படாத) சுன்னத்தான வணக்கங்களையும் , உபரியான “திக்ர்”,பிக்ர்,தௌபா சலவாத் போன்ற வணக்கங்களையும் செய்து வருகின்றனர். 
இப்பள்ளி வாயல்களைப் பற்றி அல்லாஹ் - “ நிச்சயமாக பள்ளிவால்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானதாகும்,”என அல் குர்ஆனில் அழுத்தமாக கூறுகின்றான். 
தொடர்ந்து படிக்க......


நபிமார்கள், வலிமார்கள் பெயரில் வழங்கப்படும்
பொதுமையான அன்னதானத்தையே கந்தூரி என்று அழைக்கின்றனர்.
பொதுவாக ஏழைகளும், ஏனையவர்களும் பாகுபாடின்றி சேர்ந்து புசிக்கும் உணவு கந்தூரி ஆகும். 
பல்வேறு நோக்கங்களுக்காக கந்தூரி கொடுக்கப்பட்டு வந்துள்ளதை வரலாற்று ரீதியாக நோக்க முடியும். 
ஊரில் பஞ்சம், இயற்கை அனர்த்தங்கள், நோய் நொடிகள் அகல்வற்கும் கந்தூரி கொடுத்து பிரார்த்திப்பார்கள். வயல்களில் அறுவடை முடிந்த பின்பும் பயிர்களில் நோய்கள் வந்திறங்காமல் பாதுகாப்புத் தேடியும் கந்தூரி கொடுப்பர். 
ஹதீஸ் கிரந்தங்களைப் பாராயணம் செய்து அதனை முடிக்கும்போதும் கந்தூரி கொடுப்பர்.
இப்படியாக கந்தூரிகள் பல்வேறு நோக்கங்களை மையமாகக் கொண்டு வழங்கப்படுகின்றன. 
பொதுவாக கந்தூரி வைபவங்களை மூன்று வகையாக நோக்கலாம்.

1. நபிமார்கள், வலிமார்கள் பெயரால் வழங்கப்படும் கந்தூரி

2. பலாய் முஸீபத்துக்கள் அகல வழங்கப்படும் கந்தூரி

3. அல்லாஹ்வின் பேரருளை வேண்டி வழங்கப்படும் கந்தூரி

கந்தூரியில் ஏழைகள்,

இறந்தவர் ஆத்மா இல்லம் வருமா?


جزاك الله خيرا يا شرقي مولوي

புனித இரவுகளில் மரணித்தவர்களின் றூஹுகள் வாழ்ந்த இடங்களுக்கு வருவதாக நீண்டகாலமாக மக்கள் நம்புகின்றனர். அதனால், இருட்டானதும் வீட்டில் மணமேற்றி அவர்கள் பெயரில் யாஸீன் சூறாக்கள் ஓதுகின்றனர். 
அவர்களுக்காக தர்மம் செய்கின்றனர். துஆக் கேட்கின்றனர். இந்த நல்ல நடைமுறையால் உயிருள்ளவர்களுக்கும் மரணித்தவர்களுக்குமான உறவு பேணப்பட்டு வந்தது.

இந்த நம்பிக்கை நலிந்து இந்த நடைமுறையும் அருகிவிட்டது. மரணித்தவர்களின் நினைவும் மங்கிவிட்டது. இதற்கு பிரதான காரணம் வஹாபிகளின் தீய தீவிர பிரச்சாரமாகும்.

ஒருவர் மரணித்தால் அவரின் ‘றூஹ்‘ வெளியே வரமாட்டாது. அது சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் முடங்கிக்கிடக்கும் என்று இவர்கள் வாதிக்கின்றனர்.

இவர்களின் வாதம் ஆதாரமற்றது. ஹதீஸ் ஆதாரங்களும், அறிஞர்களின் தீர்ப்பும் இவர்களுக்கு எதிராகவே உள்ளன. இதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் பொறுக்கிக் கீழே தரப்பட்டுள்ளன.

01. இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் றஹிமஹுமுல்லாஹ் ஆகிய இருவரின் ஆசிரியர்களான இமாம் அபூபக்கர் இப்னு ஷைபாவும், இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாறக் றஹிமஹுமுல்லாஹ் ஆகிய இருவரும் ஹளரத் அம்றுப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுவைத் தொட்டும். 
இமாம் அஹ்மத்,முஸ்னதிலும் இமாம் தப்றானி முஃஜமுல் கபீறிலும், இமாம் ஹாகீம் சஹிமுஸ்தத்றக்கிலும், இமாம் அபூநுஐம், ஹில்யாவில் சஹீஹான சனதுடன் அறிவிக்கின்றனர்.

றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்,

உலகம் காபிர்களுக்கு சொர்க்கம் முஃமின்களுக்கு சிறை. ஒரு முஃமினின் றூஹ் உடலிலிருந்து வெளியேறினால், ஒரு மனிதன் சிறையிலிருந்து வெளியேறியவனைப் போலாவான். சிறையிலிருந்து விடுதலை பெற்றவன் பூமியின் எப்பகுதிக்கும் சென்று வரும் உரிமையைப் பெறுவான்.

ஆதாரம் : கிதாபுஸ் ஸுஹ்து, இமாம் இப்னு முபாறக், ஹதீது எண் 597, பக்கம் 211

பித்அத் விளக்கம் -..தொடர்- 02


moulavi krm sahlan rabbani (bba-hon)
abulirfan.blogspot.com

நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது வழிகேடாகுமா ? 
நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்வில் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது கூடாது அது வழிகேடு என்ற கருத்து இன்று மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. 
நபி (ஸல்) அவர்கள் தடைசெய்த விடயங்களைச் செய்வது வழிகேடாகுமே தவிர அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது வழிகேடாகாது. 
அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில்
وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا [27 

“றஸூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்​ததை எடுத்து நடங்கள் அவர்கள் தடுத்ததை விட்டும் தவிர்ந்து நடங்கள்” என்றுகூறியுள்ளான்       (அல்ஹஷர்-27)
இந்த வசனத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்டதை தவிர்ந்து நடங்கள் என்று கூறப்படவில்லை என்பதை நாம் அவதானிக்க வேண்டும். எனவே நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்டதை செய்வது கூடாது என்ற கருத்து தவறானதாகும்.
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்

قال النبي صلى الله عليه وآله وسلم : «ما أمرتكم به فائتوا منه ما استطعتم وما نهيتكم عنه فاجتنبوه»([2][28]).

“நான் ஏவியதை முடியுமான அளவு எடுத்து நடங்கள் நான் விலக்கியதை தவிர்ந்து நடங்கள்” 
(புஹாரீ-6068,முஸ்லிம்-7288,அஹ்மத்-18)


யாகௌது, யா முஹ்யத்தீன் எனக் கூறலாமா?

யாராவது கஷ்டமான வேலையில் என்னை அழைத்தால் அவனது கஷ்டங்கள் தீர்க்கப்படும். நெருக்கடியான வேளையில் என் பெயர் விழித்து என்னை அழைப்பவரது துயரங்கள் நீங்கும். என்னை வஸீலாவாக்கி அல்லாஹ்விடம் கேட்கப்படும் தேவைகள் நிறைவேறும். 
யாராவது இரண்டு றகாஅத் நபில் தொழுது ஒவ்வொரு றகாஅத்திலும் சூறா பாத்திஹாவுக்குப் பின் சூறா இக்லாஸை பதினொரு தடைவ ஓதி ஸலாம் கொடுத்தபின் ரஹுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து ஸலாம் கூற வேண்டும். 
அதன் பின் மனதில் நினைத்துக்கொண்டு இறாக் திசை நோக்கி பதினெட்டு எட்டுக்கள் எடுத்துவைத்து ஒவ்வொரு எட்டிலும் எனது பெயர் கூறி என்னை விளிக்க வேண்டும். அல்லாஹ்வின் உதவியால் அவரது காரியம் நிறைவேறும். இவ்வாறு கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஹத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம் : பஹ்ஜதுல் அஸ்றார், பக்கம் - 102

பித்அத் விளக்கம்



தொடர்-01

-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) (BBA-Hons)



ஸுன்னத்

ஸுன்னத் என்பதற்கு ஹதீஸ் கலை மேதைகள், சட்டக்கலை வல்லுனர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அறிஞர்கள் மத்தியில் பல விரிவான வரைவிலக்கணங்கள் உள்ளன. சுருக்கமாகச் சொல்வதாயின் ஸுன்னத் என்பது

“நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என்பனவாகும்.”

பித்அத்

பித்அத் என்பதற்கு பின்வரும் வரைவிலக்கணங்கள் அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. 
01.”இஸ்லாமிய ஷரீஅத்தின் எந்த அடிப்படையுமின்றி புதிதாக உருவாக்கப்பட்டது பித்அத்ஆகும். ஷரீஅத்தின் அடிப்படையில் புதிதாகஉ ருவாக்கப்பட்டது பித்அத்அல்ல”.

(ஜாமிஉல்உலூமிவல்ஹிகம்,பக்கம் 160-இப்னுறஜப்அல்ஹன்பலீ)

பத்ஹுல்பாரீ,பாகம்5,பக்கம்156-இப்னுஹஜர்அஸ்கலானீ)

02.ஷரீஅத்திற்குமாற்றமான அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்டது பித்அத் ஆகும். 
அத்தப்யீன் பீஷறஹில் அர்பஈன் பக்கம் 221- இப்னு ஹஜர் அல்ஹைதமீ .

தொப்பி தலைப்பாகை


தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரிய ஆதாரங்கள்:

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி, தலைப்பாகை அணிந்திருப்பதற்கு ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாது, காணவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்த பி.ஜே.யின் முகத்திரை கீழ்காணும் ஆதாரங்கள் மூலம் கிழித்தெறியப்படுகிறது.

1. அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் அல்லாவின் தூதரே, இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும் ? என்று கேட்டார், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகள், (முழு நீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், தொப்பிகள்
காலுறைகள்ஆகியவற்றைஅணியாதீர்கள்.                               

காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால் காலுறை இரண்டும் கனுக்கால்களுக்குகீழே இருக்கும் படி கத்தரித்துக்கொள்ளட்டும். குங்குமப் பூச்சாயம் மற்றும் வர்ஸ்எனும் வாசனைச் செடியின் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள் என்று சொன்னார்கள். (புஹாரி 5083)

வஸீலாத்தேடலாமா? தொடர்-08





உலகில் யாரால் அல்லது எந்த வஸ்துவால் என்ன செயல் வெளியானாலும் அச்செயலுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான். 
கத்தி வெட்டியது. நெருப்பு சுட்டது என்பதெல்லாம் மஜாஸ் அக்லீ என்ற வகையைச் சேர்ந்ததேயாகும்.ஏனெனில் சுடுதல் என்ற செயலும் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் நெருப்புக்கும், கத்திக்கும் உரியதல்ல. நெருப்பு சுயமாகச் சுடுவதுமில்லை. கத்தி சுயமாக வெட்டுமதுமில்லை.

நெருப்புச் சுயமாகச் சுடும் என்று சொல்வதும் கத்தி சுயமாக வெட்டும் என்று சொல்வதும் அறியாமையாகும். நெருப்பு சுயமாக சுடுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் (அலை) அவர்களைச் சுட்டிருக்க வேண்டும்.

கத்தி சுயமாக வெட்டுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் தங்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்த நேரத்தில் அந்தக் கத்தி அவர்களை வெட்டியிருக்க வேண்டும். எனவே, நெருப்பு சுயமாகச் சுடுவதுமில்லை என்பதும் கத்தி சுயமாக வெட்டுவதுமில்லை என்பதும் விளங்கி விட்டது.

மேலே நான் எழுதிக் காட்டிய உதாரணங்களில் “ஷபல்லாஹுல் மறழ” (அல்லாஹ் நோயைச் சுகப்படுத்தினான்.) என்பதும் “அன்பதல்லாஹுல் பக்ல” (கீரையை அல்லாஹ் முளைக்கச் செய்தான்.)

என்பதும் “ஹகீகத் அக்லீ” என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதாவது ஒரு செயலை அச்செயலுக்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்வதாகும். இவ்விரு உதாரணங்களிலும் சுகமாக்குதல், முளைக்கச் செய்தல் என்ற இரு செயல்களும் அச்செயலுக்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

இதே போல் “ஷபத்தவாஉல் மறழ” (மருந்து நோயைச் சுகமாக்கி விட்டது) என்பதும் “அன்பதல் மதருல் பக்ல” (மழை கீரையை முளைக்கச் செய்து விட்டது.) என்பதும் “மஜாஸ் அக்லீ” என்ற வகையைச் சேர்ந்ததாகும்.

அதாவது ஒரு செயலை அச்செயலுக்குரியவனின் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அது வெளியாவதற்கு வழியாக – பாத்திரமாக இருந்த ஒருவன் பக்கம் அல்லது ஒன்றின் பக்கம் சேர்த்துச் சொல்வதாகும்.

இவ்விரு உதாரணங்களிலும் சுகமாக்குதல், முளைக்கச் செய்தல் என்ற இரண்டு செயல்களும் அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்க்கப்படாமல் அவ்விரு செயல்களும் வெளியாவதற்கு வழியாக - காரணமாக இருந்த மருந்தின் பக்கமும், மழையின் பக்கமும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.