சங்கைக்குரிய குருந்தையடி அப்பா நாயகம் கந்தூரி



கல்முனை சவலக்கடை வீதியில் வீரத்திடல் எனும் இடத்தில் வயல் வெளிகளின் நடுவில் வீற்றிருந்து ஆட்சி அதிகாரம் பாதுகாப்பு வழங்குவதுடன் பல கராமத்களையும் நிகழ்த்தி வரும் மகான் குருந்தையடி அப்பா நாயகம் வலீயுல்லாஹ் அவர்களின் அருள்மிகு கொடியேற்றம் இன்று (25.09.2011) ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவில் திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நன்பகல் 12.25 அளவில் கந்தூரி வழங்கப்பட்டு மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றது.  இதற்காக பல்வேறு ஊர்களிலும் இருந்து குறித்த வீரத்திடலுக்கு பலநூற்றுக்கணக்கான முஹிப்பீன்கள் சமூகமளித்திருந்தனர்.

கல்முனையில் பல பிரதேசங்களிலிருந்து விசேட பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. பெண்களுக்கு தனியான ஏற்பாடுகளுடன் கந்தூரி மிகவும் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெற்றது.

இந்நிகழ்வுகள் குருந்தையடிப்பா வலிய்யுல்லாஹ் தர்ஹா ஷரீப் நிர்வாக குழுவினர் மற்றும் கல்முனைக்குடி ஈராக் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

புகைப்படங்கள் உள்ளே..

இதனை காத்தான்குடி றப்பானிய்யஹ் அரபிக் கல்லாரி மாணர்வகள் மற்றும் சங்கைகுரிய மெளலவீமார்கள் சிறப்பாக நடாத்தி வைத்தனர். பல ஊர்களிலுமிருந்து நூற்றுக்கணக்கான அருள்மிகு முஹிப்பீன்கள் கலந்து கொண்டு நிகழ்சிகளை சிறப்பித்தார்கள்.

இக்கந்தூரி நிகழ்வானது வருடா வருடம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

















































செய்தியும் புகைப்படங்களும்
எமது கல்முனைகுடி நிருபர்.