இஸ்லாத்தில் நினைக்க மறக்கக்கூடாத இடம் தான் இது! என்ன வென்னு புரியுதா? புரிஞ்சா செரி!
"என்னுடைய சஹாபாக்கள் வானத்துத்தாரகைகளைப் போன்றவர்கள் அவர்களில் யாரை நீங்கள் பின் பற்றினாலும் நேர்வழி பெற்றுவிட்டீர்கள்"
என்று 1400 ஆண்டுகளுக்கு முன் தன் தோழர்களைப்பற்றி நன்மாராயம் சொல்லிச் சென்றார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் . அவர்களின் வீரத் தோழர்கள் தன் உயிரை அல்லாஹ்வுக்காகவும், அவன் றசூலுக்காகவும்,தீனுல் இஸ்லாத்திற்காகவும் அர்ப்பணமாக்கிக் கொண்ட இடம் தான் இவை இரண்டும்.
இங்கு அவர்கள் காபிரீன்களுடன் செய்த யுத்தம் "பத்ர்" யுத்தம் என்று சொல்லப்படும். இவ் யுத்தம் றமழான் மாதம் பிறை 17 ல் நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.முதலாவது போட்டோவில் நீங்கள் காணும் இக்கிணற்றுக்குத்தான் பத்ர் என்று சொல்லப்படும்.