هل تطير المساجد في عرصات القيامة؟


மறுமை வெளியில் பள்ளிவாயல்கள் பறந்துசெல்லுமா?




  உலகில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கும், தங்களின் இறைவனுக்கும் இடையேயான தொடர்பினை நெருக்கமாக்கிக் கொள்வதற்கான புனித இடங்களாக பள்ளிவாயல்களை அமைத்துக் கொள்கின்றனர். 
அதில் அவர்கள் தங்களின் இறைவன் கடமையாக்கிய பர்ளான, (கடமையாக்கப்படாத) சுன்னத்தான வணக்கங்களையும் , உபரியான “திக்ர்”,பிக்ர்,தௌபா சலவாத் போன்ற வணக்கங்களையும் செய்து வருகின்றனர். 
இப்பள்ளி வாயல்களைப் பற்றி அல்லாஹ் - “ நிச்சயமாக பள்ளிவால்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானதாகும்,”என அல் குர்ஆனில் அழுத்தமாக கூறுகின்றான். 
தொடர்ந்து படிக்க......

இவற்றிலிருந்து பள்ளிவாயல்களை ஏனைய இடங்களுக்கு ஒப்பாக்க முடியாது. என்பதை விளங்க முடிகின்றது. பள்ளிவாயல்கள் தவிர்ந்த மற்ற இடங்களில் தொழுவதற்கு ஆகும் என்றிருந்தாலும் சரியே.!
பள்ளிவாயல்களை பரிபாலனம் செய்பவர்கள் குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறிக்காட்டுகின்றான்.

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள். 
மேற்கூறப்பட்ட வசனத்தில் பள்ளிவாயல் பரிபாலனம் செய்பவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுப்பவர்களாகவும், அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்களாகவும் இருக்கவேண்டும் என அல்லாஹ் ஆனையிடுகின்றான் . 
இதன் மூலம் அவனுடைய இல்லம் பள்ளியின் மகத்துவமும், இவ்வுலகத்தில் அதற்கு அவன் வழங்கிய சிறப்புக்களும் தெளிவாகின்றன. 
நபிமார்கள் றசூல்மார்களை ஏனைய மனிதர்களைவிட இவ்வுலகில் சிறப்பித்தும், மறுவாழ்வில் அவர்களை சிறப்பித்துக்காட்ட அவர்களின் திருக்கரங்களில் திருக் கொடிகளையும், ஷபாஅத்தும் (மன்றாட்டம்) வழங்கி சிறப்பிக்கவிருப்பதைப் போல, 
மறுமையில் எவற்றைக்கொண்டு? இறையில்லங்களைச் சிறப்பிக்க இருக்கின்றான் என்பதே இவ்வெழுத்துக்களின் நோக்கமாகும்.

அது பற்றி இங்கு கவனிப்போம்.....

நபிகள் (ஸல்) அவர்கள் சொன்னதாக அனஸ் (றழி) நவில்கின்றார்கள். கியாம நாளையில் பள்ளிவாயல்கள் வெள்ளை (குதிரை),அல்லது முட்டை வடிவமான வாகனம் போல் கொண்டு வரப்படும். 
அதன் கால்கள் “அன்பர்” பரிமளத்தால் ஆகியிறுக்கும்., அதன் கழுத்துக்கள் குங்குமத்தால் அமைந்திருக்கும்.,அதன் தலைகள் மனமான கஸ்தூரியால் இருக்கும்.,அதன் முதுகுகள் பச்சை மரகதத்தால் இருக்கும்., முஅத்தின்கள் அதை இழுத்துச் செல்வார்கள், இமாம்கள் அதை ஓட்டிச்செல்வார்கள். 
அவற்றைக் கொண்டு கியாம நாளில் கண்ணைப் பறிக்கும் மின்னல் போல் கடப்பார்கள். அதைப்பார்த்த கியாம வாசிகள் இவர்கள் முகர்றபான மலக்குகளோ? முர்ஸலான நபிமார்களோ? என்றுசொல்லுவார்கள். 
அவர்களைப் பார்த்து கியாமவாசிகளே என்று அழைக்கப்பட்டு “இவர்கள் முகர்றபான மலக்குகலுமல்லர், நபிமார்களுமல்லர்,றசூல்மார்களுமல்லர், ஆனால் அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்துக்கள். 
இவர்கள்தான் –ஜமாஅத்- தொழுகையைப் பேணி தொழுது வந்தவர்கள்.” என்று (அமரர்களால்) கூறப்படும். 
கூறப்பட்ட ஹதீது அறபில்......... 
وَعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنَّهُ قَالَ: " تُحْشَرُ الْمَسَاجِدُ كَأَنَّهَا بُخْتٌ بِيضٌ قَوَائِمُهَا مِنَ الْعَنْبَرِ، وَأَعْنَاقُهَا مِنَ الزَّعْفَرَانِ، وَرُؤُوسُهَا مِنَ الْمِسْكِ الْأَذْفَرِ، وَأَسْنَامُهَا مِنَ الزَّبَرْجَدِ الْأَخْضَرِ، وَقُوَّادُهَا الْمُؤَذِّنُونَ يَقُودُونَهَا، وَالْأَئِمَّةُ يَسُوقُونَهَا، فَيَعْبُرُونَ بِهَا فِي عَرَصَاتِ الْقِيَامَةِ كَالْبَرْقِ الْخَاطِفِ، فَيَقُولُ أَهْلُ الْقِيَامَةِ: هَؤُلَاءِ الْمَلَائِكَةُ الْمُقَرَّبُونَ وَالْأَنْبِيَاءُ الْمُرْسَلُونَ، فَيُنَادُونَهُمْ يَا أَهْلَ الْقِيَامَةِ، مَا هَؤُلَاءِ الْمَلَائِكَةُ الْمُقَرَّبُونَ وَلَا الْأَنْبِيَاءُ وَلَا الْمُرْسَلُونَ، بَلْ هُمْ أُمَّةُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِينَ كَانُوا يَحْفَظُونَ صَلَاةَ الْجَمَاعَةِ "  
الكتاب: تنبيه الغافلين بأحاديث سيد الأنبياء والمرسلين للسمرقندي
المؤلف: أبو الليث نصر بن محمد بن أحمد بن إبراهيم السمرقندي (المتوفى: 373هـ)

வஹ்ப் பின் முனப்பிஹ் (றழி) சொல்கிறார்கள், 
கியாம நாளையில் பள்ளிவாயல்களைக் கப்பல்களைப்போல் கொண்டு வரப்படும். அவை முத்தைக்கொண்டும், மரகதத்தைக் கொண்டும் ஆக்கப்பட்டிருக்கும். அவைகளில் தொழுதவர்களுக்கு சிபாரிசு செய்யும்.

கிதாப் (நூல்) தன்பீஹுல் காபிலீன் பீ அஹாதீதி செய்யிதில் முர்ஸலீன் லிஸ்ஸமர்கன் தீ. 
முஅல்லிப்:. அபுல்லைத் நஸ்ரிப்னு முஹம்மதிப்னு அஹ்மதிப்னு இப்றாஹீம் ஸமர்கன்தீ (ஹிஜ்ரீ 373 வபாத்)

மேல் சொன்ன தாபியீன் களில் ஒருவரான வஹ்ப் பின் முனப்பஹ் உடைய வரிகள் அறபியில்.......................... 
وَعَنْ وَهْبِ بْنِ مُنَبَّهٍ رَحِمَهُ اللَّهُ تَعَالَى , قَالَ: يُؤْتَى بِالْمَسَاجِدِ يَوْمَ الْقِيَامَةِ كَأَمْثَالِ السُّفُنِ مُكَلَّلَهً بِالدُّرِّ وَالْيَاقُوت 
فَتَشْفَعُ لِأَهْلِهَا
الكتاب: تنبيه الغافلين بأحاديث سيد الأنبياء والمرسلين للسمرقندي
المؤلف: أبو الليث نصر بن محمد بن أحمد بن إبراهيم السمرقندي (المتوفى: 373هـ)


ஹில்யாவில் முன்தகப் பகுதியில் அனஸ் (றழீ) சொல்கிறார்கள்.
நபிகள் ஸல் அவர்கள்தொழுகையிலிருந்து சலாம்சொன்னால் தனது வலது கரத்தால் நெற்றியைத்தடவிய பின் பின்வருமாறு சொல்வார்கள். 
“அல்லாஹ் எனும் பெயர்கொண்டு ஆரம்பிக்கின்றேன்., அவன் அன்பும் அருளும் உடையவன், அவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை, இறைவா !என்னை விட்டும் கவலையையும், துக்கத்தையும் போக்கி விடுவாயாக” 
நற்செய்தி : 
கியாமத் நாளையில் ஒரு கூட்டம் வந்து சிறாத்(சிறாதுல் முஸ்தகீம் பாலத்தில்) அழுதவர்களாக தரித்திருக்கும். சிறாத்தைக் கடந்து செல்லுங்கள் என்று சொல்லப்படும். 
அதற்கு அவர்கள் (அதன் கீழே உள்ள) நெருப்பைக் கண்டு பயப்படுகின்றோம் என்றுசொல்வார்கள். 
அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் அக்கூட்டத்தைப்பார்த்து
“நீங்கள் (உலகில்) கடலை எப்படிக்கடந்தீர்கள்? என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் கடலை கப்பலைக்கொண்டு கடந்தோம் என்று சொல்வார்கள். 
உடன் அவர்கள் இறை வணக்கம் செய்த பள்ளிவாயல் களைக் கப்பல்களைப்போல் கொண்டு வரப்படும். அதில் அவர்கள் ஏறி சிறாத்தைக் கடப்பார்கள்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக அனஸ் (றழி) அவர்கள் நவின்றார்கள். 
உலகத்திலுள்ள பள்ளிவாயல்கள் வெள்ளைக் குதிரை(வாகனம்)போல் கொண்டு வரப்படும். அதன் கால்கள் பரிமளத்தால் ஆகியிருக்கும். 
அதன் கழுத்துக்கள் குங்குமத்தால் இருக்கும். அதன் தலைகள் கஸ்தூரியால் ஆகியிருக்கும். அதன் உச்சி மரகதத்தால் இருக்கும். 
முஅத்தின்கள் அதை இழுத்துச் செல்வார்கள். இமாம்கள் அதை ஓட்டிச்செல்வார்கள். தொழுகையைப் பேணித்தொழுதவர்கள் அதைப் பின்துயர்வார்கள். 
கியாம வெளியை அவர்கள் கடப்பார்கள்.கியாமவாசிகள் அவர்களைப் பார்த்து “இன்னோர் முகர்றபான மலக்குகளோ? அல்லது முர்ஸலான நபிமார்களோ? என்று கேட்பார்கள். 
அதற்கு “இன்னோர் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தினரான ஜமாஅத் தொழுகையைப் பேணித் தொழுதவர்கள் என்றுசொல்லப்படும். 
நூல்: நுஸ்ஹதுல் மஜாலிஸ் வல் முன்தகபுன் நபாயிஸ்.
யாத்தவர்:- அப்துர் றஹ்மான் பின் அப்திஸ்ஸலாம் அஸ்ஸபூரி ஹீஜ்ரீ 894 வபாத் மேல்சொல்லப்பட்ட தமிழ் வரியின் அறபு வசனம் .......
في المنتخب من الحلية عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا سلم من صلاته مسح جبهته بيده اليمنى ويقول بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم اللهم أذهب عني الهم والحزن ... بشارة: إذا كان يوم القيامة يأتي قوم فيقفون على الصراط يبكون فيقال لهم جوزوا على الصراط فيقولون نخاف من النار فيقول جبريل عليه السلام وكيف كنتم تمرون على البحر فيقولون بالسفن فيؤتى بمساجد كان يصلون فيها كالسفن فيركبونها ويمرون على الصراط وعن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تحشر مساجد الدنيا كأنها بخت بيض قوائمها من العنبر وأعنقها من الزعفران رؤوسهم من المسك وأزمتها من الزبرجد والمؤذنون يقودونها والأئمة يسوقونها والمحافظون على الصلاة يتبعونها فيعبرون في عرصات القيامة فتقول أهلها هؤلاء ملائكة مقربون أو أنبياء مرسلون فيقال هؤلاء الذين حافظوا على صلاة الجماعة من أمة محمد صلى الله عليه وسلم
الكتاب: نزهة المجالس ومنتخب النفائس
المؤلف: عبد الرحمن بن عبد السلام الصفوري (المتوفى: 894هـ)

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

“கியாம நாளையில் உலகத்திலுள்ள “பள்ளிகளை” இறைவன் கொண்டு வருவான். அவை வெள்ளையான பந்தய ஒட்டகைகள்போல்/முட்டைபோல் இருக்கும். அதன் கால்கள் பரிமளத்தால் ஆகியிருக்கும். அதன் கழுத்துக்கள் குங்குமத்தால் இருக்கும். அதன் தலைகள் கஸ்தூரியால் இருக்கும். 
அதன் திமில் (முதுகுகள்) பச்சை மரகதத்தால் இருக்கும். முஅத்தின்கள் அதை இழுத்துச் செல்வார்கள். இமாம்கள் அதை ஓட்டிச் செல்வார்கள். அதை பரிபாளிப்பவர்கள் அதைக் கொண்டு கொழுகிக்கொள்வர். 
அது கியாம நாளில் கண்னைப்பறிக்கும் மின்னல்போல் பறக்கும். இதை கண்ட கியாம வாசிகள் இவர்கள் (மிக நெருங்கிய) முகர்றபான மலக்குகளோ? அல்லது முர்ஸலான நபிமார்களோ? என்று வியப்பார்கள். அதற்கு “இவர்கள் மலக்குகளுமல்லர், நபிமார்களுமல்லர். 
ஆனால் இவர்கள் பள்ளிவாயல்களுடைய வர்கள். நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தைச் சேர்ந்தவர்கள், தொழுகையை பேணித் தொழுபவர்கள்.” என்று (மலக்குகளால்) சொல்லப்படும்.” 
நூல் :- அல் ஜாமிஉ லி அஹ்காமில் குர்ஆன். 
முஅல்லிப்:- 
அபூ அப்துல்லாஹ் முஹம்மத் பின் அஹ்மத் பின் அபீ பக்ர் பின் பர்ஹுல் அன்ஸாரீ அல்கஸ்றஜீ ஷம்சுத்தீன் அல் குர்துபீ ஹிஜ்ரீ 671 வபாத். 
குர்துபீ இமாம் மேல் சொன்ன நபிமொழி...


وَرُوِيَ مِنْ حَدِيثِ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَأْتِي اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِمَسَاجِدِ الدُّنْيَا كَأَنَّهَا نُجُبٌ بِيضٌ قَوَائِمُهَا مِنَ الْعَنْبَرِ وَأَعْنَاقُهَا مِنَ الزَّعْفَرَانِ وَرُءُوسُهَا مِنَ الْمِسْكِ وَأَزِمَّتُهَا مِنَ الزَّبَرْجَدِ الْأَخْضَرِ وَقُوَّامُهَا وَالْمُؤَذِّنُونَ فِيهَا يَقُودُونَهَا وَأَئِمَّتُهَا يَسُوقُونَهَا وَعُمَّارُهَا مُتَعَلِّقُونَ بِهَا فَتَجُوزُ عَرَصَاتِ الْقِيَامَةِ كَالْبَرْقِ الْخَاطِفِ فَيَقُولُ أَهْلُ الْمَوْقِفِ هَؤُلَاءِ مَلَائِكَةٌ مُقَرَّبُونَ أَوْ أَنْبِيَاءُ مُرْسَلُونَ فَيُنَادَى مَا هَؤُلَاءِ بِمَلَائِكَةٍ وَلَا أَنْبِيَاءَ وَلَكِنَّهُمْ أَهْلُ الْمَسَاجِدِ وَالْمُحَافِظُونَ عَلَى الصَّلَوَاتِ مِنْ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
الكتاب: الجامع لأحكام القرآن = تفسير القرطبي
المؤلف: أبو عبد الله محمد بن أحمد بن أبي بكر بن فرح الأنصاري الخزرجي شمس الدين القرطبي 
(المتوفى: 671هـ

மேலும் சில ஹதீஸ்கள் வந்துள்ளன :- கியாமத் நாளையில் உலகத்தில் உள்ள பள்ளிவாயல்களை இறைவன் கொண்டுவருவான். அவை வெண்மை யான பந்தய ஒட்டகைகள் போல் தோன்றும் ( அல்லது முட்டை வடிவான வாகனம்)போல் தோன்றும். 
அதன் கால்கள் ( அன்பர்) பரிமளத்தால் இருக்கும். அதன் கழுத்துக்கள் குங்குமத்தால் இருக்கும். அதன் தலைகள் கஸ்தூரியால் இருக்கும். அதன் திமில் முதுகு பச்சை மரகதத்தால் இருக்கும். முஅத்தின்கள் அதை இழுத்துச் செல்வர். இமாம்கள் அதை ஓட்டிச் செல்வர். அதை நிர்வகிப்போர் அதை பிடித்துச் செல்வர். 
அது கண்ணைப் பறிக்கும் மின்னல்போல் கடந்து செல்லும். இதை கண்ட கியாம வாசிகள் இவர்கள் (மிக நெருங்கிய) முகர்றபான மலக்குகளோ? அல்லது முர்ஸலான நபிமார்களோ? என்று வியப்பார்கள். அதற்கு “இவர்கள் மலக்குகளுமல்லர், நபிமார்களுமல்லர். 
ஆனால் இவர்கள் பள்ளிவாயல்களுடைய வர்கள். நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தைச் சேர்ந்தவர்கள், தொழுகையை பேணித் தொழுபவர்கள்.” என்று (மலக்குகளால்) சொல்லப்படும்.” 
நூல் :- அர்ஷீப் முல்தகா அஹ்லுல் ஹதீத்-05 
கூறப்பட்டமொழி பெயர்ப்பிற்கான அறபு வசனம்.... 
يأتي الله يوم القيامة بمساجد الدنيا كأنها نجائب بيض قوائمها من العنبر وأعناقها من الزعفران ورؤوسها من المسك وأزِمَّتها من الزبرجد الأخضر، والمؤذنون فيها يقودونها وأئمتها يسوقونها وعُمَّارها متعلقون بها، فتجوز عرصات القيامة كالبرق الخاطف فيقول أهل الموقف: هؤلاء ملائكة المقربون وأنبياء مرسلون فينادى بهم: ما هؤلاء من ملائكةٍ ولا أنبياء ولكنهم أهل المساجد والمحافظون على الصلوات من أمة محمدٍ صلى الله عليه وسلم ".
الكتاب : أرشيف ملتقى أهل الحديث -

.

முடிவாக:- 
கியாமத் நாளில் அல்லாஹ்வின் புனிதத்தளங்கள் எதுவாக இருப்பினும் அவை அதில்தொழுத அனைவரையும் சுமந்து கண்ணைப் பறிக்கும் மின்னல்போல் பறந்து செல்லும். இது அல்லாஹ்  அவனின் பள்ளிவாயலை கௌரவப்படுத்தும் மேலான சிறப்புக்களில் உள்ளதாகும். எங்களின் மன்னர் நபி (ஸல்) அவர்களை பரம் பொருளாளன் விண்ணகம் அழைத்ததுபோல்.



அபுல் புஸ்தான்