ஹாஜாஜீ மகா கந்தூரிக்கான மௌலீத் ஆரம்பம்.
01.07.2012 முதல் இடம் பெறும் இந்நிகழ்வுகளின் சில புகைப்படங்கள்
26வது வருடமாக இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் கரீப் நவாஸ் பௌண்டேஷன் நாடாத்தும்
புனித காழிறு பாச்சரம் பாடப்படும்போது.. |
கரீபே நவாஸ், அதாயே றஸுல், குத்புல் ஹிந்து ஹழுறத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி)அவர்களினதும், அவர்களின் அருந்தவப்புதல்வர் ஸாஹிபுல் ஜலால் ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும் மகா கந்தூரிக்கான கொடியேற்ற நிகழ்வுகள் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 11.07.2012 புதன் கிழமை மாலை 5.00 மணிக்கு மிக விமர்சையாக இடம் பெறவுள்ளது.
திறந்து வைக்கப்பட்டுள்ள ஹாஜாஜீ மகா கந்தூரி அலுவலகம் |
இந்நிகழ்வுக்கான கரீப் நவாஸ் பெளண்டேஷன் ஸ்தாபனத்தினரின் விஷேட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு கடந்த 01.07.2012 திகதி முதல் எதிர்வரும் 10.07.2012 திகதிவரை மௌலீத் அத்தாயே றஸூல் தினமும் இஷாத் தொழுகையின் பின் ஓதப்பட்டு வருவதுடன் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அவர்கள் எழுதிய புனித காழிறு பாச்சரமும் பாடப்பட்டு வருகின்றது.
மௌலீது "அதாயே றஸூல்" ஓதப்படும் காட்சி |
இந்நிகழ்வுகளில் அதிசங்கைகுரிய ஷெய்குநாயகம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தபோது எடுக்கப்பட்டு எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைபடங்களில் சில வற்றை அகமியம் தமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறது.