
உயர்வான பாவனை!!
கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன்!
என் முகம் மட்டும் தெரிந்தது!!
என் உள்ளத்தில் நிரம்பிக் கிடந்த குரோதம்,,தெரியவில்லை!!
இருப்பதை அப்படியே காட்டுமாமே... கண்ணாடி?
ஏன்,,என்... குரோதத்தைக் காட்டவில்லை..?
உண்மையை,,உரித்து,, காட்டுகின்ற ,திறன் கண்ணாடிக்கு,கிடையாது!!
மனிதர்களைப் போலவே அதுவும் வெறும் புறத்தை மட்டுமே பார்க்கிறது!!
அகத்தைப் பார்க்கின்ற சக்தி,,அதற்க்கு கிடையாது!!
ஆனால்,,,அதில் ஒரு பேருண்மை பொதிந்திருக்கிறது!!
நாம் ,,ஒரு மனிதனின் வேடத்தை ஏற்கிறோம்...!
வேடம் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது!!
வேடத்திற்கு தக்க நடிப்பும்,நம்மிடம் இருக்க வேண்டும்..!
பாரதியாராக வேடம் இட்டுக்கொண்டால்,,,அதற்குரிய மிடுக்கும்,,கம்பீரமும்,,நம்மிடம் வந்து விட வேண்டும்!
அப்போதுதான் ,நம்மை,,பாரதியாராக உலகம் பாவிக்கும்!!
இல்லையென்றால்,,அவ்வாறு ,வேடமிட்டும்,,பயனின்றி போய் விடும்?
சாயிபாபாவாக,,வேடமிட்டால்,,அவருக்குரிய சாந்தமும்,,
நன்றாக இரு என்கிற பாவனையில்,,,மேலெழுந்த கையும்,,,நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
சாதரணமாக காணப்பட்டால்,,நான் சாயிபாபா,,நான் சாயிபாபா,,,என்று நீயே தான்,,சொல்லிக் கொள்ள வேண்டுமே ,தவிர,
உன்னைக் காண்பவர்கள் அவ்வாறு ஏற்க மாட்டார்கள்
ஆகவே,
வேடமிட்டுக் கொண்டால் மட்டும் போதாது!
அதற்குரிய பாவனையையும்,,நாம் கைக்கொள்ள வேண்டும்!
அப்போதுதான்,அந்த வேடத்துக்குரிய,,,,தாத்பரியம் விளங்கும்!!
நாடகத்தில்,நகைச்சுவை வேடமிட்டிருந்த நண்பர் ஒருவரை,சந்திக்க சென்று இருந்தேன்!
அவர் மிகவும் சோகமயமாக காட்சி தந்தார்!!
நாடகத்தில்,,பார்ப்போரைஎல்லாம்,,,வயிறு குலுங்க வைக்கும் நபரா நீங்கள்..?
என்று கேட்டேன்!!
அவர் சொன்னார்,"",நாடகம் வேறு,,வாழ்க்கை வேறு,,!என்னதான் நம் வாழ்க்கை சோக மயமாக
காட்சி தந்தாலும்,,
அந்த நடிப்பு என்று வரும் போது,,
நான் என்னையே மறந்து விடுவேன்!
அந்த நகைச்சுவையாகவே மாறி விடுவேன்!""
ஒரு ஏழை அரச வேடம் தரித்தால்,,,கிழிந்த உடையும்,,கலைந்த தலையும் செல்லுபடியாகாது!
அரச உடையும்,,தலையில்,,கிரீடமும்,,
குடியிருக்க வேண்டும்!
அவனைப் பார்த்ததும்,மற்றவர்கள்,,அரசன்,,எனக்கூற வேண்டும்!!
அரசனுக்குரிய கம்பீரமும்,,,அவன் முகத்தில் தவழ வேண்டும்!!
நாம் என்னவாக,,காட்சியளிக்க,,,விரும்புகிறோமோ,,,
அதற்குரிய தகுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்!!
அந்த பாவனையை,,ஏற்றுக்கொள்ள வேண்டும்...!
அவ்வாறு அந்த பாவனையை ஏற்றுக்கொண்ட பின்,,
நீங்கள் கண்ணாடியின் முன்,,,சென்று நின்றால்,,...?
அந்த பாவனையை,,நீங்கள் ஏற்றிருப்பதால்,,உங்கள் உருவத்தை,,,அது,,அப்படியே,,,
மாற்றி விடாமல் காட்டி விடுகிறது!
ஆகவே,,
ஒரு பக்தனின்,பாவனையை,,அடிக்கடி ஏற்றுக்கொள்ளுங்கள்!
அந்த பாவனையைக் கொண்டே,,உங்கள் புறநிலை,,மட்டுமின்றி,,,அகநிலையும்,,,
மாறுதல் அடைய வாய்ப்புண்டு!!!
நீங்கள்,அடிக்கடி வேடம் ஏற்கத்தான் செய்கிறீர்கள்!!ஏற்கின்ற வேடம் சற்று நல்ல வேடமாக இருக்கட்டுமே!!
ஒரு பக்தனின் வேடத்தை,,,
ஒரு மகானின் வேடத்தை,,,
ஒரு மெய்ஞான குருவின் வேடத்தை,,
ஏற்றுக்கொள்ள ,,பிரயத்தனப் படுங்களேன்!!
உங்கள் பாவனை,,,
உங்கள் வேடம்,,
சத்தியத்தை உணர்த்தக்கூடியதாக,,,
அமைய
முயற்சியை
மேற்க்கொள்ளுங்களேன்!!
கண்ணாடி,,உண்மையைத்தான்
எடுத்துக் காட்டுகிறது!
அந்த ,உண்மையாக இருக்க முயலுங்கள்!!!
இதை எழுதியது,,நரியம்பட்டு சலாம்!!